போராடிய பெண் மீது போலீஸ் தாக்குதல்?

Added : டிச 01, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 போராடிய பெண் மீது போலீஸ் தாக்குதல்?

புதுடில்லி:தெலுங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து, பார்லி., வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் மருத்துவரை, நான்கு பேர் கும்பல் சமீபத்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தது. அத்துடன், உடலை எரித்துள்ளது. இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பெண் டாக்டர் கொலையைக் கண்டித்து, டில்லியைச் சேர்ந்த அனு துபே என்ற பெண், பார்லி., வளாகத்துக்கு வெளியே, சாலையோர பிளாட்பாரத்தில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். 'என் சொந்த பாரத நாட்டில், எனக்கு பாதுகாப்பு இல்லையா' என்ற பதாகையை கையில் வைத்திருந்தார்.'நோட்டீஸ்'அவருடன் போலீசார் பேச்சு நடத்தினர். போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி கூறினர். அதை ஏற்காமல் அந்த பெண், தொடர்ந்து அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை, பார்லிமென்ட் தெரு காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.அங்கு, அந்தப் பெண் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதைஅடுத்து, டில்லி பெண்கள் கமிஷன், டில்லி போலீசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து, தனியாக போராட்டம் நடத்திய பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரை அடித்து, துன்புறுத்தியுள்ளனர்.
ஆண் காவலர்கள் அந்த பெண்ணை அடித்து, உதைத்ததுடன், மிரட்டியுள்ளனர். இதனால், அவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். அது குறித்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? கைதுஇது தொடர்பாக, வரும், 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தெலுங்கானாவில் பாலியல் பலாத்காரம் செய்து, பெண் டாக்டரை எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, நான்கு பேரையும், 14 நாட்கள் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.'கைது செய்யப்பட்ட நால்வரையும், எந்த விசாரணையும் இல்லாமல், உடனே துாக்கிலிட வேண்டும்' என, காவல் நிலையம் முன் குவிந்திருந்த உள்ளூர் மக்கள் கோஷமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், கைது செய்யப்பட்டோரை, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை.அதையடுத்து, உள்ளூர் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட், காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார்.
அவரை பின் பக்கம் வழியாக அழைத்து வந்து, கைது செய்யப்பட்டோரை போலீசார் ஆஜர்படுத்தினர்.எரிந்த நிலையில் பெண் உடல்தற்கொலை என சந்தேகம்ஐதராபாதில் பெண் டாக்டர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், ஷாம்ஷத்பாத் அருகே, எரிந்த நிலையில், ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 'சம்பவ இடம் மற்றும் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்க்கும்போது, அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். விசாரணைக்குப் பிறகே முழு விபரம் தெரியவரும்' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-டிச-201912:11:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சீனாவிலும் இதே போல் தான்.. பதாகை பிடித்தால் போலீஸ் தள்ளிக்கொண்டு போய்விடும்.. ஆனால் அதே சமயம் இப்படி கற்பழிச்சவனுங்க பின்மண்டையில் துப்பாக்கியால் பொட்டுன்னு சுட்டு தீர்ப்பை என்றைக்கோ கொடுத்திருப்பார்கள்.. இங்கே துட்டு வாங்கிட்டு அவனுங்க வெளியே சுத்த போறானுங்க.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-201920:59:55 IST Report Abuse
Sampath Kumar நல்ல போலீஸ் எண்ணத்தை சொல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X