அமைதியாக பணியாற்ற விடுங்கள்: முஸ்லிம் துணை பேராசிரியர் உருக்கம்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (4)
Advertisement

வாரணாசி:''என்னை அமைதியாக பணியாற்ற விடுங்கள்,'' என, பனாரஸ் பல்கலை சமஸ்கிருத துறை துணை பேராசிரியர் பணிக்கான தேர்வில், முதலிடம் பிடித்துள்ள இஸ்லாமியர் பெரோஸ் கான், உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உ.பி.,யில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பனாரஸ் இந்து பல்கலையில், சமஸ்கிருத துறை உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு, 10 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில், முனைவர் பெரோஸ் கானும் ஒருவர். 'இவரை, சமஸ்கிருதம் போதிக்க அனுமதிக்கக் கூடாது' என, பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.'கடும் எதிர்ப்புக்கு அஞ்சி, பெரோஸ் கான் தலைமறைவாகி விட்டார்; அவர் நேர்முகத் தேர்வில் பங்கேற்பது சந்தேகமே' என, ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இந்நிலையில், பல்கலையின், ஆயுர்வேத துறை தலைவர் யாமினி பூஷண் தலைமையில், நேற்று முன்தினம் நேர்காணல் நடந்தது. அதில் பெரோஸ் கான் கலந்து கொண்டார். அவர், அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதாக, யாமினி பூஷண் தெரிவித்தார்.

இதையடுத்து, பல்கலை செய்தி தொடர்பு அலுவலகம் மூலம், பெரோஸ் கான், ஊடகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:பனாரஸ் இந்து பல்கலை வளாகத்தில், அமைதியும், சகோதரத்துவமும் நிலவ, மாணவர்கள் துணை புரிய வேண்டும். ஊடகங்கள் பொய் செய்திகள் வெளியிடுவதையும், என் குடும்ப வாழ்க்கையில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். நான் அமைதியாக வாழவும், பணியில் முழு கவனத்துடன் செயல்படவும் அனைவரும் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
02-டிச-201913:58:21 IST Report Abuse
suresh kumar வீரமா முனிவர், உமறுப்புலவர் என பல வேற்றுநாட்டினர் தமிழ் கற்று தமிழுக்கு பெருமை சேர்க்கவில்லையா? தமிழில் பைபிளை மொழியாக்கம் செய்த அந்தணர், அந்தணராகவே இருந்து அந்த பணி செய்தாரே தமிழில் இந்துமத இதிகாசங்களை கற்றறிந்து பொதுமேடைகளில் புலமையுடன் சொற்ப்பொழிவு ஆற்றும் வேற்று மதத்தவர்களும் இருக்கிறார்கள். 'முதலிடம் பிடித்துள்ள இஸ்லாமியர் பெரோஸ் கானும்' இவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-டிச-201913:43:04 IST Report Abuse
Nallavan Nallavan இவரை எதிர்க்கும் மத வெறியர்கள் உண்மையை உணரவேண்டும் ... சம்ஸ்கிருதம் போதிப்பதில் இவருக்கு கல்வியிலோ, நிபுணத்துவத்திலோ குறை இருந்தால் அவர்கள் அதை நாகரிகமான முறையில் தெரிவிக்கட்டுமே ??
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-டிச-201913:41:13 IST Report Abuse
Nallavan Nallavan இவரை எதிர்த்துப் போராடும் முட்டாள் மதவெறியர்கள் உண்மையை உணரவேண்டும்.. சம்ஸ்கிருதத்தைப் போதிக்க இவருக்குத் தேவையான நிபுணத்துவம் இல்லை என்றால் மட்டுமே கேள்வி எழுப்பலாம்.. இவரது மதத்தைச் சுட்டிக்காட்டுவது தேவையற்றது ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X