பொது செய்தி

தமிழ்நாடு

என்று தீரும் என்.எச்., ரோடு பிரச்னை? பல்லடத்தில், வாகன ஓட்டிகள் புலம்பல்

Added : டிச 01, 2019
Advertisement

பல்லடம்:பல்லடத்தில், என்.எச்., ரோடு பிரச்னைக்கு என்று தீர்வு கிடைக்குமோ என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.பல்லடத்தில், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், அவிநாசி, உடுமலை பொள்ளாச்சி, தாராபுரம் ஆகிய முக்கிய நகரங்கள் இணைகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால், விபத்து ஏற்பட்டு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.இதனால், பல்லடம் என்.எச்., ரோடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பே, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆனால், அதற்கேற்றவாறு ரோடு விரிவாக்கம் செய்யப்படவில்லை. அகலப்படுத்த போதுமான இடவசதி இருந்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளன.இச்சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்,என்.எச்., ரோடு சீரமைக்கப்பட்டது. இருந்தும், ரோடு குறுகளாக இருப்பதால், வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன. வாகனங்கள் அவசரகதியில் முந்திச்செல்ல முயல்கின்றன. வாகன ஓட்டிகளின் இந்த அத்துமீறல், பாதசாரிகளின் உயிருக்கு உலை வைப்பதாக உள்ளது.அவசரகதியில் ரோட்டை விட்டு கீழே இறங்கும் வாகன ஓட்டிகள், நடைபாதையில் உள்ள பள்ளங்கள், பாறைகளில் சிக்கி, கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். சமீபத்தில், பெய்த மழையால், பல இடங்களில், தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.தவறி கீழே விழுந்தால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைதான் உள்ளது. இவ்வாறு, வாகன ஓட்டிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும்என்.எச்., ரோட்டை, உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராஜா கூறுகையில், 'விபத்துகளை கருத்தில் கொண்டு, பல்லடம்- - காரணம்பேட்டை வரை, ரோடு விரிவாக்கம் செய்ய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, ஒரு ஆண்டுக்கு மேல் ஆகின்றது. அனுமதி கிடைத்தவுடன், உடனடியாக விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X