சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகரிப்பால் அவற்றை கொள்முதல் செய்யும் அரசு மற்றும் தனியார் நுாற்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சிவகங்கையில் உள்ள பட்டுக்கூடு அங்காடி மற்றும் பட்டு நுாற்பு மையம் மூலம் இம்மாவட்டத்தில் விவசாயிகள் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்பெரி செடிகளை சாகுபடி செய்து பட்டுப்பூச்சிகளை வளர்த்து வருகின்றனர். தற்போது பரவலாக மழை பெய்துள்ள நிலையில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகரித்துள்ளது. பட்டுப்பூச்சிகளின் இரைக்காக வளர்க்கப்பட்ட மல்பெரி செடிகள் செழித்து வளர்ந்துள்ளதே இதற்கு காரணம். விளைந்த பட்டுக்கூடுகளை விவசாயிகள் சிவகங்கை பட்டுக்கூடு அங்காடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கூடு 300 முதல் 350 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவே கடந்த மாதம் 400 ரூபாய் விலை இருந்தது. மழையால் கூடுகள் நனைந்து சுருங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளது.சிவகங்கை மட்டுமல்லாமல் விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் பட்டுக்கூடுகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் இங்குள்ள அரசு பட்டு நுாற்பு மையத்திற்கு தேவையான பட்டுக்கூடுகள் போக உபரி கூடுகளை திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் தனியார் நுாற்பாளர்கள் வாங்கிச்செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE