நாறி கிடக்கும் நடுப்பங்கு தோட்டம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
திருப்பூர்:ரோட்டின் நடுவே தேங்கி நிற்கும் மழை நீரால், நடுப்பங்கு தோட்டம் பகுதியில் பொதுமக்கள் பெரும் அவதிக்குஉள்ளாகின்றனர்.திருப்பூர், தாராபுரம் ரோட்டிலிருந்து அரண்மனைபுதுார் வழியாக செரீப் காலனி செல்லும் வகையில் ஒரு ரோடு உள்ளது. இப்பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியில் தினமும் நுாற்றுக்கணக்கான கார் மற்றும் பைக் உள்ளிட்ட

திருப்பூர்:ரோட்டின் நடுவே தேங்கி நிற்கும் மழை நீரால், நடுப்பங்கு தோட்டம் பகுதியில் பொதுமக்கள் பெரும் அவதிக்குஉள்ளாகின்றனர்.திருப்பூர், தாராபுரம் ரோட்டிலிருந்து அரண்மனைபுதுார் வழியாக செரீப் காலனி செல்லும் வகையில் ஒரு ரோடு உள்ளது. இப்பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியில் தினமும் நுாற்றுக்கணக்கான கார் மற்றும் பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களும், ஏராளமான சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.இதில், நடுப்பங்கு தோட்டம் பகுதியில் ரோட்டோரம் உள்ள கழிவு நீர் கால்வாய் ரோடு மட்டத்திலிருந்து உயரமாக உள்ளது. இதனால் மழை பெய்யும் போது ரோட்டில் சேகரமாகும் மழைநீர் கால்வாய்க்குள் சென்று விழ வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்கிறது.இதனால், இப்பகுதியில் சில இடங்களில், ரோட்டின் மையப்பகுதியில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் ஆழமான குழி இருப்பது தெரியாமல், தடுமாறுகின்றனர். பிரதான ரோட்டை உயர்த்தி, மழை நீர் ரோட்டில் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X