பொது செய்தி

இந்தியா

'பேப்பரெக்ஸ் எக்ஸ்போ' சர்வதேச காகித கண்காட்சி

Added : டிச 01, 2019
Advertisement

புதுடில்லி:டில்லியில், 'பேப்பரெக்ஸ்' எனப்படும், சர்வதேச காகிதக் கூழ், காகிதம் மற்றும் துணை பொருட்கள் துறையின், 14வது பிரமாண்ட கண்காட்சி, டிச., 3ல் துவங்குகிறது.

இது குறித்து, இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள, 'ஐவ் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:உலகளவில், காகிதம் மற்றும் அதுசார்ந்த துணை பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வற்றை தெரிந்து கொள்ளவும், சந்தை வாய்ப்புகளை அறிந்து, பயன்படுத்தவும், 'பேப்பரெக்ஸ்' கண்காட்சி உதவும்.பத்திரிகை தொழிலுக்கு தேவையான காகிதம், வர்த்தகத்திற்கான அட்டைப் பெட்டி, நுகர்வோர் பயன்பாட்டிற்கான, 'டிஷ்யூ' காகிதம் ஆகிய மூன்று துறைகளுக்கு, இக்கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா உள்ளிட்ட, 25 நாடுகளைச் சேர்ந்த, 700க்கும் அதிகமான நிறுவனங்கள், பங்கேற்று, அவற்றின் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளன.

இக்கண்காட்சியில், காகிதம் மற்றும் அதுசார்ந்த துறைகளின் வளர்ச்சி, வர்த்தக வாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கருத்தரங்குகள், கலந்தாய்வு கூட்டங்களும் நடைபெறும். வரும், 6ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சி, காகித துறையில் உள்ள நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும், புதிய தொழில் துவங்குவோருக்கான வழிகாட்டியாகவும் விளங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X