பொது செய்தி

தமிழ்நாடு

192 கிராமச்சாலை பணிகளை துரிதப்படுத்த உத்தரவு

Added : டிச 01, 2019
Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கிராம சாலைகளை ரூ. 8 கோடி செலவில் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 2018-19 ம் ஆண்டிற்கு கிராமப்புற சாலைகளை சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.8.158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் பணிகள் நடக்கிறது. ஒட்டு மொத்த வருவாய் நிதித்திட்டத்தில் 26 சாலைகளும், ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தில் 65 சாலைகளும், நபார்டு மூலதன மானியத்திட்டத்தில் 18 சாலைகளும், பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாடு திட்டம் மூலம் 44 சாலைகள் என மொத்தம் 192 சாலைகளில் 290 கி.மீ., துாரத்திற்கு சீரமைப்பு பணி நடக்கிறது. கல்லல் பகுதியில் நடந்த சாலைப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X