முன்னாள் மாணவர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 01, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், 'லேப்டாப்' வழங்க வலியுறுத்தி, முன்னாள் மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த 2017-18, 19ல் படித்த, மாணவியர் ஏறத்தாழ, 300 பேருக்கு 'லேப்டாப்' வழங்கப்படவில்லை. 27ம் தேதி பள்ளியை முன்னாள் மாணவியர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.'இரண்டு நாட்களில், வழங்கப்படும்,' என ஆசிரியர்கள் கூறினர். ஆனால், வழங்கவில்லை. இச்சூழலில், 'லேப்டாப்' வழங்க வலியுறுத்தி, முன்னாள் மாணவியர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். கல்லுாரியில் சேர்ந்த ஆவணங்களை கொண்டு வாருங்கள், 'லேப்டாப்' தருகிறோம் என, ஆசிரியர்கள் கூறினார்கள். இதனால், ஆவேசம் அடைந்த மாணவியர் காங்கயம் கிராஸ் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தெற்கு போலீசார், கல்வி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். சில மாணவியரை கலெக் டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.டி.ஆர்.ஓ., வை சந்தித்து மாணவியர் தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட டி.ஆர்.ஓ., உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X