சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை பழைய கட்டடம் இடிப்பு

Added : டிச 01, 2019
Advertisement
 மருத்துவமனை பழைய கட்டடம் இடிப்பு

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறாக இருந்த பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

திருப்புவனம் 2013ல் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சமுதாய நல மையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்துகளில் காயமடைந்தவர்கள் முதல் உதவி சிகிச்சைக்காக இங்கு அழைத்து வரப்படுகின்றனர். புதிய கட்டடத்தின் முன்புறம் பழைய கட்டடம் சேதமடைந்த நிலையில் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் இருந்தது. மருத்துவமனை கழிவுகள், நோயாளிகளின் உறவினர்கள் வீசும் குப்பையால் பழைய கட்டடம் துர்நாற்றம் வீசி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதனை இடித்து அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X