திருப்புத்துார்: திருப்புத்துார் துாய அமல அன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடிமரத்தில் அமல அன்னை பொறிக்கப்பட்ட கொடி கட்டப்பட்டு துாபம் காட்டப்பட்டது. மாவட்ட வியானி அருட்பணி மையசெயலர் அமலன் கொடியேற்றினார். பங்குத்தந்தை சந்தியாகு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திருப்பலி நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினசரி பல்வேறு தலைப்புகளில் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து நற்கருணையின் மரியாள் என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, அன்னை தேர் பவனி நடைபெறும்.