சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் கனமழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது

Added : டிச 01, 2019
Advertisement
 கடலுார் மாவட்டத்தில் கனமழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவ மழை, காரணமாக 15ம் தேதி முதல் மழை பெய்ய துவங்கியது. நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய இயல்பான மழையளவான 292.3 0மி.மீட்டரில் இதுவரை 262.15 மி.மீட்டர் மழை (30ம் தேதி நீங்கலாக) பெய்துள்ளது. அதாவது நவம்பர் மாதம் மட்டும் பெய்ய வேண்டிய மழையளவில் 89 சதவீதம் பெய்துள்ளது. இன்னும் 11 சதவீதம் மழை பெய்ய வேண்டும். டிசம்பர் மாதம் 182 மி.மீ., மழை பெய்ய வேண்டி உள்ளது.கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:காட்டுமன்னார்கோவில் 116 மி.மீ., லால்பேட்டை 82, அண்ணாமலை நகர் 68.20, பரங்கிப்பேட்டை 61, சிதம்பரம் 55, புவனகிரி 43, சேத்தியாத்தோப்பு 34.80, கொத்தவாச்சேரி 27, கடலுார் 22.10, கலெக்டர் அலுவலகம் 20.20, லக்கூர் 11.10, குறிஞ்சிப்பாடி 10.50, ஸ்ரீமுஷ்ணம் 9.20, வானமாதேவி 8, மே.மாத்துார் 7, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 6, பெலாந்துறை 4.60, வடக்குத்து 3, பண்ருட்டி 3, வேப்பூர் 3, காடாம்புலியூர் 2 மி.மீ., மழை பெய்துள்ளது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

கடலுாரில் வண்ணாரப்பாளையம், பாரதி நகர், ஜட்ஜ்பங்களா ரோடு, சரவணா நகர், குமரன் நகர், கூத்தப்பாக்கம், பெரப்பன்குட்டை போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஜட்ஜ் பங்களா ரோடு, பீச்ரோடு ஆகிய இடங்களில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆங்காங்கே டிராபிக் ஜாம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி பகல் 12:00 மணி முதல் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாலையில் படிப்படியாக மின் வினியோகம் கொடுக்கப்பட்டது.நேற்று பகலில் பெய்த கனமழையினால் பெண்ணையாறு, கெடிலம் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X