தமிழ்நாடு

சம்பள பேச்சு! தொழில் சங்கம் ஆயத்தம்: விரைவில் கூட்டுக்கமிட்டி

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
Advertisement
 சம்பள பேச்சு! தொழில் சங்கம் ஆயத்தம்: விரைவில் கூட்டுக்கமிட்டி

திருப்பூர்,:புதிய சம்பள ஒப்பந்த பேச்சு கோரிக்கைகளை இம்மாத இறுதிக்குள் தயாரித்து, அனைத்து தொழில்முனைவோர் சங்கங்களுக்கு அனுப்ப, பனியன் தொழிற் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.திருப்பூரில், ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து பின்னலாடை தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் சங்கங்கள், தொழில்முனைவோர் சங்கங்கள் பேச்சு நடத்தி, புதிய சம்பளம் நிர்ணயிக்கின்றனர்.
சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., -எல்.பி.எப்., - அண்ணா தொழிற் சங்கம், எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., தொழிற் சங்கங்கள்; சைமா, ஏற்றுமதியாளர் சங்கம், நிட்மா, டீமா, டெக்மா உள்ளிட்ட தொழில்முனைவோர் சங்கங்கள் இந்த பேச்சில் ஈடுபடுகின்றன.கடந்த 2016ல், பின்னலாடை தொழிலாளர்களுக்கு 33 சதவீதம் சம்பள உயர்வு வழங்க இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2016ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் வரும் 2020, மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
வரும் ஏப்., மாதம், புதிய சம்பள ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டியுள்ளது.இதையடுத்து, புதிய சம்பள ஒப்பந்தம் மேற்கொள்ளவதற்கு பனியன் தொழிற் சங்கங்கள் தயாராகி வருகின்றன.புதிய ஒப்பந்த பேச்சில், தொழிலாளர் நலன் சார்ந்த என்னென்ன கோரிக்கைகளை முன்வைப்பது; எத்தனை சதவீதம் சம்பள உயர்வு கேட்பது என, தொழிற் சங்கத்தினர் ஆலேசித்துவருகின்றனர்.ஒப்பந்த பேச்சில் ஈடுபடும் சங்கத்தினர், தனித்தனியே கூடி, சம்பள ஒப்பந்த கோரிக்கை மனு தயாரிக்க உள்ளனர்.
சி.ஐ.டி.யு., பனியன் சங்க செயலாளர் சம்பத் கூறியதாவது:புதிய ஒப்பந்த பேச்சுக்கான ஆயத்த பணிகளில் தொழிற் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. தொழிற் சங்கங்கள் தங்களுக்குள் ஆலோசித்து, அதனடிப்படையில், சம்பள ஒப்பந்த பேச்சு கோரிக்கைகள் அடங்கிய கருத்துரு தயாரிக்கப்படும்.அதன்பின் கூட்டுக்கமிட்டி அமைத்து, பொது கோரிக்கை தயாரிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைத்து தொழில்முனைவோர் சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X