வெங்காயத்தை விழுங்கும் 'தவளை': விவசாயிகள் கவலை

Added : டிச 01, 2019
Share
Advertisement
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் நடவு செய்த 40ம் நாள், 'தவளை' நோய் பாதிப்பால் வெங்காயம் அழுகிப்போவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் வெங்காயம் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மழையை மட்டுமே நம்பி நடவு செய்துள்ளதால் வீரியமான விதைக்காய்களை, விவசாயிகள் திண்டுக்கல், மதுரையில் உள்ள கமிஷன் கடைகளில்
 வெங்காயத்தை விழுங்கும் 'தவளை':  விவசாயிகள் கவலை

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் நடவு செய்த 40ம் நாள், 'தவளை' நோய் பாதிப்பால் வெங்காயம் அழுகிப்போவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் வெங்காயம் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மழையை மட்டுமே நம்பி நடவு செய்துள்ளதால் வீரியமான விதைக்காய்களை, விவசாயிகள் திண்டுக்கல், மதுரையில் உள்ள கமிஷன் கடைகளில் வாங்கினர்.கீழக்கோயில்பட்டி, மேலக்கோயில்பட்டி, ரெட்டியபட்டி, மலையப்பன்பட்டி, சின்னுபட்டி, குரும்பபட்டி பகுதிகளில் விதை வெங்காயத்தில் ஏற்பட்ட பழுதால் நடவு செய்த 40 நாளில் 'தவளை' நோய் தாக்கி, வெங்காயம் பட்டு போகிறது.3 முறை உரமிட்டும், 2 முறை மருந்து தெளித்தும் நோயின் தாக்கம் குறையவில்லை.நோய் பரவுவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். வேளாண் துறையினர் நேரடியாக ஆய்வு செய்து நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X