சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போர்வெல்லில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

Added : டிச 01, 2019
Advertisement

நெய்வேலி : நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள ஸ்ரீராம் நகரில், 20 அடி ஆழமுள்ள போர்வெல் குழியில் விழுந்த ஆட்டை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள எம்.எல்.ஏ.,அலுவலகம் அமைந்துள்ள ஸ்ரீராம் நகரில் 20 அடி ஆழமுள்ள போர்வெல் குழியில், நேற்று மதியம் ஒரு ஆடு விழுந்து விட்டது. அருகில் இருந்தவர்கள் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.தாசில்தார் கீதா, டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வி.ஏ.ஓ., சண்முகம் மற்றும் வடக்குத்து ஊராட்சி செயலர் மணிவாசகம் ஆகியோர் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி ஆட்டை பத்திரமாக மீட்டனர். அந்த போர்வெல்லை அதிகாரிகள் உடனடியாக மூடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X