பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு திருமண உதவித்தொகை

Added : டிச 01, 2019
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழை பெண்களுக்கு ரூ.25 ஆயிரம், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்பும் பெண்ணின் வயது திருமண நாளன்று 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவுமில்லை. பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோரும் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் 5 ம் வகுப்பு வரை படித்தால் போதுமானது.பட்டப்படிப்பை கல்லுாரி, தொலை துாரக்கல்வி அல்லது அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலையில் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரியில் படித்திருக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பயன்பெறலாம்.ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. விரும்புவோர் சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X