நத்தம்: நத்தம் நகரில் உருவாகியுள்ள பல்லாங்குழி ரோடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.நத்தம் யூனியன் அலுவலகத்தில் இருந்து அவுட்டர் பகுதி வரை நெடுகிலும் ரோடு பஞ்சராகி பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. அவுட்டரிலிருந்து செந்துறை செல்லும் ரோட்டிலும் நீண்ட துாரத்திற்கு பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்கள் மேலும் பெரிதாகி வருகின்றன. பள்ளிகளில் மழைநீர் தேங்குவதால் டூவீலரில் செல்வோர் ஆழம் தெரியாமல் பள்ளத்தை கடக்கும் போது தடுமாறி விழும் நிலை உள்ளது. பள்ளங்களில் தேங்கி நிற்கும் அசுத்த நீர் நடந்து செல்பவர்கள் மீது வாரி இறைக்கப்படுகிறது. விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரோட்டில் பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும்.