சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'யூ - டியூப்' பார்த்து திருடிய மாணவர்கள் விருத்தாசலத்தில் மூன்று பேர் கைது

Added : டிச 01, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
விருத்தாசலம்:விருத்தாசலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, மூன்று மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'லேப்டாப்' மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36; பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே மொபைல் போன் கடை வைத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைஅக்., 31 மற்றும் செப்.,
 'யூ - டியூப்' பார்த்து திருடிய மாணவர்கள் விருத்தாசலத்தில் மூன்று பேர் கைது

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, மூன்று மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'லேப்டாப்' மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36; பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே மொபைல் போன் கடை வைத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைஅக்., 31 மற்றும் செப்., 28ல், இவரது கடையின் பூட்டை உடைத்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்தபோது, மொபட்டில் வரும், பள்ளி சீருடை அணிந்த சிறுவர்கள், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.போலீசார் விசாரித்து, விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயதுடைய பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ.,யில் படிக்கும், மூன்று மாணவர்களை கைது செய்தனர்.மொபைல் போன், லேப்டாப் என, பெருநகர மாணவர்களை போல ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, திருட்டில் ஈடுபட்டதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்காக, பூட்டுகளை லாவகமாக திறப்பது, எவ்வாறு திருடுவது என யூ - டியூப்பில் பார்த்து, தெரிந்து கொண்டுள்ளனர்.
தலைமறைவு
மாணவர்களிடம், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழு லேப்டாப்கள், நான்கு மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும், நான்கு மொபைல் போன்களுடன் தலைமறைவாக உள்ள மற்றொரு, 17 வயது மாணவரை தேடி வருகின்றனர்.கதறிய பெற்றோர்சிறுவர்களை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களின் பெற்றோர், போலீஸ் ஸ்டேஷன் முன் கதறியபடி நின்றனர். தினசரி பள்ளிக்கு தான் சென்று வந்தனர் என நினைத்திருந்த பெற்றோருக்கு, அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-201916:05:02 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) ஐந்தில் வளைக்கவில்லை என்றால் ஆபத்துதான்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-டிச-201913:06:59 IST Report Abuse
தமிழவேல் இவங்கெல்லாம் பேண்ட் பெல்ட் போட்டுக்கிறது தொந்தி விழுந்திடாம இருக்கவா ?...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-டிச-201901:13:58 IST Report Abuse
தமிழவேல் இவங்கெல்லாம் பேண்ட் பெல்ட் போட்டுக்கிறது தொந்தி விழுந்திடாம இருக்கவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X