பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துார் நீர்தேக்கம் நிரம்புவதில் தாமதம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஆத்துார்: நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்தபோதும், ஆத்துார் நீர்தேக்கம் நிரம்புவதில் தாமதம் நீடிக்கிறது.திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்துார் காமராஜர் நீர்தேக்கம் உள்ளது. பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், இதன் அருகிலேயே கூடுதல் தண்ணீரை தேக்குவதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திண்டுக்கல் மட்டுமின்றி

ஆத்துார்: நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்தபோதும், ஆத்துார் நீர்தேக்கம் நிரம்புவதில் தாமதம் நீடிக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்துார் காமராஜர் நீர்தேக்கம் உள்ளது. பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், இதன் அருகிலேயே கூடுதல் தண்ணீரை தேக்குவதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திண்டுக்கல் மட்டுமின்றி வழித்தடத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கும் தண்ணீர் ஆதாரமாக அமைந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் நிரம்பிய நீர்தேக்கம், தொடர்ந்த வறட்சியால் நீரின்றி வறண்டது. பூஜ்ய நிலையில் இருந்து,15 அடி ஆழத்திற்கு மண் அப்புறப்படுத்தப்பட்டது.சில வாரங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் நீர் வரத்து இருந்தது. தற்போது வரை, ஆடலுார், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு பகுதிகளில் சாரல் மழை நீடித்தும், நீர்தேக்கம் நிரம்பவில்லை. நேற்றைய நிலவரப்படி, 13 அடி(மொத்த கொள்ளளவு 24 அடி)யாக இருந்தது. மழை நீடிக்கும் நிலையில் நிரம்ப வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X