புதுச்சத்திரம் : பெரியப்பட்டு - கோபாலபுரம் சாலை பக்கிங்காம் கால்வாயில், புதிதாக கட்டப்படும் பாலத்திற்கு, தற்காலிகமாக போடப்பட்ட மாற்றுப்பாதை மழையால் சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு - கோபாலபுரம் நெடுஞ்சாலை வழியாக தச்சம்பாளையம், வாண்டையாம்பள்ளம், ஆண்டார் முள்ளிப்பள்ளம், காயல்பட்டு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இந்த சாலையில் பக்கிங்காம் கால்வாய் இடையே, சி. ஆர். ஐ. டி. பி., திட்டத்தின் கீழ், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய இணைப்பு பாலம் கட்டும் பணி துவங்கியது.
அதனால், பாலத்திற்கு மாற்றாக தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையால், மாற்றுப்பாதை சேதமடைந்தது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அதிக்குள்ளாகினர். தகவலறிந்த ஒப்பந்ததாரர்கள் ஜே.சி.பி., மூலம் மண் நிரப்பி சாலையை சீரமைத்தனர்.