மின்ஒயரால் விபத்து அபாயம்

Added : டிச 01, 2019
Advertisement

தாண்டிக்குடி: குப்பம்மாள்பட்டி - பெரியூர் ரோட்டில் தாழ்வாக செல்லும் மின்ஒயரால் விபத்து அபாயம் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் நபார்டு திட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளுக்கு ரோடு அமைக்கப்பட்டது. ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள ரோட்டில் செடி, கொடிகள் சூழ்ந்து எதிரே வரும் வாகனம் தெரியாத நிலை உள்ளது. பஸ் இல்லாததால், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் கிராமத்தினர் ஊர் திரும்புகின்றனர்.சில மாதங்களுக்கு முன் மரம் விழுந்து நடுப்பட்டி அருகே மின்ஒயர்கள் தாழ்வாக தொங்கின. இதை சரிசெய்ய வலியறுத்தியும் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. தொட்டு விடும் உயரத்தில் மின்ஒயர்கள் தொங்குவதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். விபரீதங்கள் நிகழும்முன் சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X