நடுரோட்டில் அதிகரிக்கும் பள்ளங்கள்

Added : டிச 01, 2019
Advertisement

ஆத்துார்: ஆத்துாரில் ரோட்டின் நடுவே விபத்து அபாய குழிகள் அதிகரித்துள்ளதால், விபத்துகளால் பாதிப்பு தொடர்கிறது.ஆத்துாரில் அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், சார்நிலை கருவூலம், தாலுகா அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. பல்வேறு கிராமங்களில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களில் வருகின்றனர். ஆத்துார் வழியே திண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி போன்ற இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால்போக்குவரத்து அதிகமாக உள்ளது.இங்குள்ள கோழிப்பண்ணை முதல் சித்தையன்கோட்டை இணைப்பு ரோடு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது.ஆத்துார் நீர்தேக்கத்தில் இருந்து, திண்டுக்கல், சின்னாளபட்டி உள்ளிட்ட இடங்களுக்கான குடிநீர்த்திட்ட குழாய்கள் உள்ளன. இதனால் குழாய்கள் சேதமடைவதும், சீரமைப்பதும் வாடிக்கையாகி விட்டது.இப்பகுதியில் முறையாக ரோடு சீரமைக்கப்படாததால், கிழக்குத்தெரு காலனி, பூஞ்சோலை, சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டின் நடுவே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பல மாதங்களாகியும் சரிசெய்யப்படாததால், விபத்துக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ரோட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X