பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை பணியாளர்கள் கூட்டம் தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

Added : டிச 01, 2019
Advertisement

விருத்தாசலம் : அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்கப்பட வேண்டும் என, நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்க மாதாந்திர கூட்டம், விருத்தாசலத்தில் நடந்தது. மாவட்ட செயலர் தங்கராசு தலைமை தாங்கினார். இணை செயலர் சேதுராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலு, சரவணன் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்.விருத்தாசலம் வட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் கம்மாபுரம் சண்முகம், விருத்தாசலம் சிவகுருநாதன் வாழ்த்தி பேசினர்.பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்திட வேண்டும்.

கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி.,க்கு இணையான ஊதியம், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில், பேக்கிங் செய்து வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வெங்கடேசன் நன்றி கூறினார். திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்து ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X