சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் தோளில் ஆற்றை கடக்கும் மாணவர்கள்: நாகை அருகே வெட்டாற்றில் திக்... திக்...

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பெற்றோர் தோளில் ஆற்றை கடக்கும் மாணவர்கள்: நாகை அருகே வெட்டாற்றில் திக்... திக்...

நாகப்பட்டினம்:நாகை அருகே, பெற்றோர் துணையோடு, வெட்டாற்றை, மாணவ - மாணவியர் கடந்து செல்கின்றனர்.

வெள்ள காலங்களில் உயிருக்கு ஆபத்து என்பதால், பாலம் அமைத்துத் தர வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில், வெண்ணாற்றில் இருந்து வெட்டாறு பிரிந்து, நாகை அருகே நாகூரில் கடலில் கலக்கிறது.மரப்பாலம்திருவாரூர் மாவட்டத்தை தாண்டி, நாகை மாவட்டத்திற்குள் பாயும் வெட்டாற்றின் கரையோரம், கடம்பங்குடி அருகே, இடது பக்கத்தில் விளாம்பாக்கம் கிராமமும், வலது கரையோரம் கோகூர் கிராமமும் அமைந்துள்ளது. விளாம்பாக்கத்தில் வசித்து வரும், 150 குடும்பத்தினர், கீவளூர் பகுதிக்கு, சாலை வழியாக செல்ல, கடம்பங்குடி வழியாக, 10 கி.மீ., கடந்து செல்ல வேண்டும்.விளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர், கோகூர் வழியாக கீவளூர் செல்வதற்கு வசதியாக, கீழ்வேளூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதிவாணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2017ல், வெட்டாற்றின் குறுக்கே மரப்பாலம் அமைக்கப்பட்டது.
சிரமம்
பராமரிப்பின்றி சேதமடைந்த மரப் பாலத்தின் நடுப்பகுதி, சில மாதங்களுக்கு முன், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், விளாம்பாக்கத்தில் இருந்து கீவளூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர், பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.சாலை வழியாக, மினி பஸ்சில் செல்லும் மாணவ - மாணவியர், குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வராத காரணத்தால், வெட்டாற்றை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, வெட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகமிருப்பதால், மாணவ - மாணவியரை, பெற்றோர் தோளில் சுமந்து, கோகூர் கரையில் விடுகின்றனர்.'வெள்ளம் கரைபுரண்டோடும் காலங்களில், ஆற்றை கடப்பது ஆபத்து என்பதால், புதிய மரப்பாலம் அமைத்து தர வேண்டும்' என, விளாம்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
02-டிச-201913:22:03 IST Report Abuse
Harinathan Krishnanandam போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை அழைத்தாவது இந்த பாலம் அடுத்த பத்து நாட்களில் கட்டி முடிக்க முதல்வர் ஆணை இட வேண்டுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X