பொது செய்தி

தமிழ்நாடு

மா நடவில் கூடுதல் லாபம் அசத்தும் அல்போன்சா

Added : டிச 01, 2019
Advertisement

மடத்துக்குளம்:அடர் நடவு மா மரங்கள் சாகுபடியில் ஈடுபட்டால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.பல்வேறு காரணங்களால், விவசாய தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், அதிக தொழிலாளர்கள் தேவையுள்ள சாகுபடி முறையிலிருந்து, விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர். இதில், குறிப்பிடத்தக்கதாக மா சாகுபடி உள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'மா மரங்களை பொதுவாக 8க்கு 8 மீ., அல்லது 10க்கு 10 மீ., இடைவெளியில் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது மிக அடர் நடவு என்ற புதியமுறையில் சாகுபடி செய்ய அரசு பரிந்துரை செய்கிறது.இந்த முறையில் அல்போன்சா ரகம் தேர்வு செய்யப்பட்டு, 3க்கு 2 மீ., இடைவெளியில், 1.5 ஏக்கர் பரப்பில், ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதற்கு சொட்டுநீர் அமைத்து பாசனம் செய்யலாம். இதற்கு பின், தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் படி, உரங்கள் இட்டு, சீராக பராமரிக்க வேண்டும். இந்த முறையில் அடர்நடவு மாசாகுபடி செய்தால் நான்காம் ஆண்டிலேயே எட்டு டன்கள் வரை மகசூல் கிடைக்கும். இதனால், குறைவான தொழிலாளர் பயன் பாட்டில் நிறைவான லாபம் கிடைக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X