சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் மோதல் வி.ஏ.ஓ., பார்வை, 'அவுட்'

Added : டிச 01, 2019
Advertisement

திருவண்ணாமலை:மனைவியின் கள்ளக்காதலன் மீது போலீஸ்காரர், ஆசிட் வீசியதில், வி.ஏ.ஓ., பார்வை பறிபோனது.

திருவண்ணாமலை அடுத்த, வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 31, கிளிப்பட்டு, வி.ஏ.ஓ.,வாக உள்ளார். வேங்கிக்கால் உண்ணாமலை நகரைச் சேர்ந்த ஸ்ரீபால், 42, 'கியூ பிராஞ்ச்' போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது மாமியார் விமலா, 52, வெறையூர் வருவாய் ஆய்வாளர்.பணியின் காரணமாக, சிவகுமார், விமலாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அங்கிருந்த ஸ்ரீபால் மனைவி ஞானசுந்தரி, 30, என்பவருடன் அறிமுகமாகி, கள்ளக்காதலாக மாறியது.

இதை, ஸ்ரீபால் கண்டித்தார்.ஆயினும், கள்ளத்தொடர்பை கைவிடாததால், ஆத்திரமடைந்த ஸ்ரீபால் மற்றும் விமலா இருவரும், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, சிவகுமார் வீட்டுக்கு சென்று, தட்டிக் கேட்டனர்.இதில் ஏற்பட்ட தகராறில், சிவகுமார் முகத்தில், ஸ்ரீபால் ஆசிட் ஊற்றினார். இதில், சிவகுமாரின் கண்கள் மற்றும் முகம் கருகி, பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்ரீபாலுக்கும், ஆசிட் காயம் ஏற்பட்டது. இருவரும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிவகுமாரின் கண் பார்வை முழுவதும் பறிபோனது. திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X