பொது செய்தி

தமிழ்நாடு

பழநி பக்தர்களுக்கு தங்கும் அறைகளை திறந்து விடலாமே

Added : டிச 01, 2019
Advertisement

பழநி: பழநி அடிவாரப்பகுதியில் பக்தர்கள் தங்கும் அறைகள் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தையொட்டி பழநி நகர் முழுவதும் எங்குபார்த்தாலும் பக்தர்கள் மயமாக காட்சியளிக்கிறது. ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தவர்கள் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பழநி கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தினமும் பழநியில் திருவிழா போல் காட்சியளிக்கிறது.இங்கு வெளியூர் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் கோயில் நிர்வாகம் சார்பில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரோப்கார் நிலையத்துக்கு அருகே பல ஏக்கர் பரப்பளவில் வாகனங்களை இலவசமாக நிறுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதனருகே தங்கும் அறைகளும் உள்ளன. இந்த அறைகள் தற்போது பூட்டியே கிடக்கின்றன.அதேசமயம் மழை காலமான தற்போது பக்தர்கள் ஒதுக்குவதற்கும், தங்குவதற்கும் வழியின்றி அவதிக்கு ஆளாகின்றனர். தங்கும் அறைகளின் வளாகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. நிற்கக்கூட இடம் இல்லை. கட்டடம் பூட்டி கிடப்பதால் பக்தர்கள் வாகன அருகிலும், கடைகளின் வாசல்களிலும் ஒதுங்கி நிற்கின்றனர். இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கேட்டபோது, ''பூட்டப்பட்டுள்ள விடுதியின் அறைகளை திறக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X