பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,மாதத்தில் இயல்பை விட குறைந்த பருவ மழை

Added : டிச 01, 2019
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், நவ.,மாதம் இயல்பான மழைப்பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளதால், பசுமைக்கு பருவ மழைகளே ஆதாரமாக உள்ளன. நடப்பு ஆண்டு, கோடை மழை, 110.8 மி.மீ., பெய்து, இயல்பை விட குறைந்தது. தென்மேற்கு பருவ மழை, இயல்பை விட அதிகரித்து, 218.40 மி.மீ., பெய்தது. இதனால், அமராவதி மற்றும் பி.ஏ.பி.,பாசன
 நவ.,மாதத்தில் இயல்பை விட குறைந்த பருவ மழை

உடுமலை:உடுமலை பகுதிகளில், நவ.,மாதம் இயல்பான மழைப்பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளதால், பசுமைக்கு பருவ மழைகளே ஆதாரமாக உள்ளன. நடப்பு ஆண்டு, கோடை மழை, 110.8 மி.மீ., பெய்து, இயல்பை விட குறைந்தது. தென்மேற்கு பருவ மழை, இயல்பை விட அதிகரித்து, 218.40 மி.மீ., பெய்தது.
இதனால், அமராவதி மற்றும் பி.ஏ.பி.,பாசன திட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து, அக்., முதல் டிச.,வரையிலான, வட கிழக்கு பருவ மழை காலத்தில், அக்.,மாதத்தின் இயல்பான மழையளவு, 147.70 மி.மீ., ஆக உள்ள நிலையில், அக்., மாதம், 234.2 மி.மீ., பெய்தது.ஆனால், நவ., மாதத்தில் வட கிழக்கு பருவ மழை குறைந்தது. 10 நாட்கள் மழை இருந்தாலும், மழைப்பொழிவு அளவு குறைவாகவே இருந்தது. மாவட்டத்தில், நவ., மாதத்தின் இயல்பான மழையளவு, 120 மி.மீ., ஆக உள்ள நிலையில், நவ.,மாதம் குறைந்து, மாவட்ட சராசரியாக, 78 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது.மாவட்டத்தில் கடந்த மாதம், உடுமலையில், 61.60 மி.மீ., மழை பெய்துள்ளது. மடத்துக்குளத்தில், 66 மி.மீ.,; திருமூர்த்தி அணைப்பகுதிகளில், 111 மி.மீ.,; திருமூர்த்தி ஆய்வு மாளிகை பகுதியில், 76.60 மி.மீ.,; அமராவதி அணைப்பகுதியில், 72 மி.மீ.,மழை பெய்துள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மீண்டும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. டிச.,மாதத்தின் இயல்பான மழையளவு, 46.60 ஆக உள்ள நிலையில், மீண்டும் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், இயல்பை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில்,' வட கிழக்கு பருவ மழை காலத்தில், செப்.,மாதம் இயல்பை விட அதிகரித்தது. நவ.,மாதத்தில், மழைக்கான காரணங்கள் அதிகளவு இருந்தும், பொழிவு குறைந்தது. தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கிடைக்கும் மழை நீரை பண்ணைக்குட்டைகள் அமைத்தும், குளம், குட்டைகளில் சேமித்தால், பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X