சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலி தொழிலாளி கடத்தி கொலை சென்னையை சேர்ந்த 10 பேர் கைது

Added : டிச 01, 2019
Advertisement

வேலுார்:கூலித் தொழிலாளியை கடத்தி கொலை செய்த, சென்னையைச் சேர்ந்த, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தட்டச்சேரியைச் சேர்ந்தவர் முருகன், 50; மனைவி தேவகி, 45, மகன் கிருஷ்ணன், 25, ஆகியோருடன், சென்னை தாம்பரத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.நவ., 22ல், 'டாஸ்மாக்' கடையில் மது குடித்து, முருகன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கிடந்த கறுப்பு நிற பையில் ரூபாய் இருந்ததாகவும், அதை முருகன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த அருண், 24, நண்பர்களுடன் முருகன் வீட்டுக்கு சென்று, அந்த பையில் தன்னுடைய, 10 லட்சம் ரூபாய் இருந்ததாகவும், பையை தொலைத்து விட்டதாகவும், பையை தரும்படியும் கேட்டார்.தாக்குபையை தான் எடுக்கவில்லை என முருகன் கூற, தகராறு ஏற்பட்டது. மறுநாள் அருணும், அவரது நண்பர்களும், துப்பாக்கி முனையில் முருகன், தேவகி, கிருஷ்ணன் ஆகியோரை காரில் கடத்தி, பணம் இருந்த பையை தரும்படி அடித்து, உதைத்துள்ளனர்.தன் வீட்டின் எதிரில் உள்ள காலியிடத்தில் பையை புதைத்து வைத்திருப்பதாக, முருகன் கூறினார்.
அந்த இடத்தை தோண்டி பார்த்ததில் பணம் இல்லை. ஆத்திரமடைந்த அருண், அவரது நண்பர்கள், இரும்பு ராடால் தாக்கியதில், முருகன் இறந்தார்.பின், முருகன் சடலம் மற்றும் தேவகி, கிருஷ்ணன் ஆகியோரை, காரில் ஏற்றிச் சென்று, அவர்களது சொந்த ஊரான தட்டச்சேரி அருகே இறக்கி விட்டு, 'இதை வெளியே சொன்னால் உங்களையும் கொலை செய்வோம்' என, அருண் கும்பல் மிரட்டி சென்றது.
புகார்
இது குறித்து, வாழப்பந்தல் போலீசில், 27ம் தேதி, கிருஷ்ணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து, தாம்பரத்தில் பதுங்கியிருந்த அருண், அவரது நண்பர்கள் என, 10 பேரை நேற்று அதிகாலை கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X