பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை: நகராட்சி நடவடிக்கை தேவை

Added : டிச 01, 2019
Advertisement

கொடைக்கானல்: கொடைக்கானலின் பிரசித்திபெற்ற நட்சத்திர ஏரியை ஆக்கிரமித்துள்ள நீர்த்தாவரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளு, குளு நகரின் மையத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாக நட்சத்திர ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி, இதனை சுற்றி நடைபயணம், குதிரை, சைக்கிள் சவாரி, அருகில் தாவரவியல் பூங்கா, ஓய்வு இருக்கைகள் என நகரின் இதயமாக இயங்குகிறது.வருவாய் கொழிக்கும் ஏரியை நகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரி 5 கி.மீ., சுற்றளவு கொண்டது. சில ஆண்டுகளாக ஏரியில் அபரிமிதமாக ஆகாய தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்கள் வளர்ந்து ஏரியின் பரப்பை சுருங்க செய்துள்ளன.அவ்வப்போது இவற்றை அகற்றினாலும், நீண்ட நாட்கள் கண்டுகொள்வதில்லை என சமூகஆர்வலர்கள் மத்தியில் புகார் எழுகிறது. ஏரியை அழகுப்படுத்த அரசால் கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் பயனின்றி உள்ளது. மனித கழிவுகள், குதிரைகளின் எச்சம், கழிவு நீர் ஏரியில் கலப்பது என ஏரி மாசடைகிறது. அத்துடன் நீர்த்தாவரங்கள் பெருகுவது கவலையளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X