ஓட்டுனர் தேர்வு தளம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுனர் தேர்வு தளம்

Added : டிச 01, 2019

உடுமலை:உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இரண்டு ஆண்டு இழுபறிக்குப்பின், ஓட்டுனர் தேர்வு தளம் திறக்கப்பட்டது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 2.5 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 75 ஆயிரம் கார்கள், லாரிகள், 2,500; ஆட்டோ, இலகு ரக சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் என, 2,500 வரை உள்ளன.உடுமலை பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 25 பேர் லைசென்ஸ் எடுக்கவும், புதிய வாகனப்பதிவுக்கு, 20 பேரும், மற்ற பணிகளுக்கு, 15 பேரும் வருகின்றனர்.உடுமலை, பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 72.74 லட்சம் ரூபாய் செலவில், நவீன ஓட்டுனர் தேர்வு தளம், இரு ஆண்டுக்கு முன் துவங்கி, கடந்தாண்டு, பணி நிறைவு பெற்றது. ஓடு தளம் தயாராகியும் திறக்காததால், சேறும், சகதியும் வாகனங்களை ஓட்டிக்காட்டி, உரிமம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.இரு ஆண்டு இழுபறிக்குப்பின், ஓட்டுனர் தேர்வு தளம், நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில்,'' உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. உடுமலையிலுள்ள பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகம், விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும்,'' என்றார்.இதில், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேல், உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X