சிதம்பரம் : லால்புரம் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தின் ஒரு பகுதி, கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. அதனால் வி.ஏ.ஓ., அலுவலகம் தற்காலிகமாக மக்கள் சேவை மையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லால்புரம் கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் இயங்கி வந்தது. இந்த கட்டடம் சரியாக பராமரிப்பு இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிதம்பரம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை கிராம உதவியாளர் மட்டும் அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது கட்டடத்தில் கழிப்பறை பகுதியில் சுவர் சரிந்து விழுந்தது.அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக பதிவேடுகளை, அருகில் உள்ள கிராம சேவை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE