கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தகராறில் ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 51. இவரது வீட்டின் வழியாக, அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலிருந்து வரும் கழிவு நீர் சென்றுள்ளது.இது குறித்து செல்வராஜ், கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலைச்செல்வி, கொளஞ்சி, கங்கா ஆகியேர் செல்வராஜை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் உட்பட நான்கு பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.