கோபால்பட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை

Added : டிச 01, 2019
Advertisement

கோபால்பட்டி: கோபால்பட்டி பகுதியில் உலாவரும் குரங்குகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இப்பகுதி சுற்றிலும் சிறுமலை, கரந்தமலை உள்ளிட்ட மலைகள் சூழ்ந்து உள்ளதால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சியால் மலைப்பகுதிகளில் உணவு கிடைக்காமல் குரங்குகள் இடம் பெயரத் தொடங்கின.மலையடிவார தோப்புகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக தஞ்சமடைந்தன. ஆரம்பத்தில் தென்னந்தோப்புகளில் உலவிய குரங்குகள் படிப்படியாக கோபால்பட்டி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. ஓராண்டுக்கு முன்பு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சுற்றித்திரிந்த குரங்குகள் தற்போது 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெருகி உள்ளன.கோபால்பட்டி தெற்குப்பகுதி, எம்.ஜி.ஆர்., நகர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் கூட்டமாக திரிகின்றன. வீடுகளின் ஜன்னல் வழியாக புகுந்து உணவுப் பொருட்களை எடுத்து தின்பதுடன், வீசி சேதப்படுத்துகின்றன. குரங்குகளால் குழந்தைகளும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பீதியுடன் உள்ளனர். ஆட்டம்போடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து மலைப் பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X