பொது செய்தி

தமிழ்நாடு

மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் 'கொடை' பிரையன்ட் பூங்கா

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
Advertisement
 மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் 'கொடை' பிரையன்ட் பூங்கா

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் எதிர்வரும் சீசனுக்கு இப்போதே மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் நடக்கும் மலர்கண்காட்சியை லட்சக்கணக்கான பயணிகள் கண்டு ரசிப்பர். மேலும் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் லட்சக் கணக்கான மலர்கள் சுற்றுலா பயணிகளை கிறங்கடிக்கும்.இம்மலர்க் கண்காட்சிக்காக இப்போதே பிரையன்ட் பூங்கா தயாராகி வருகிறது.

இப்பூங்காவில் மலர்படுகைகள் அமைக்க மண் உலர்த்துதல் மற்றும் தொழு உரமிட்டு பண்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.முதற்கட்டமாக ஆர்னித்கேலம், பிங்க் ஆஸ்டர் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. வீரீயரக மலர்கள் சில தினங்களில் நடவு செய்யும் பணி துவங்கும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X