விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்ந்தும், வத்தல், உளுந்தம், துவரம் மற்றும் பாசிப்பருப்பு, நிலக்கடலை பருப்பு, கடலை புண்ணாக்கு, ரவை விலை குறைந்தும் விற்பனையானது.
கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.2,250, நல்லெண்ணெய் ரூ.3,900, சன்பிளவர் எண்ணெய் ரூ.1,450, பாமாயில் ரூ.10 அதிகரித்து ரூ.1,300, 80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா ரூ.500 குறைந்து ரூ.6,500, மிட்டாய் ரகம் ரூ.1000 குறைந்து ரூ.7,000, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.900 குறைந்து ரூ.4,000. 100 கிலோ சர்க்கரை ரூ. 3,600, 90 கிலோ மைதா ரூ.3,460, 25 கிலோ ரவை ரூ.20 குறைந்து ரூ1,140, 55 கிலோ பொரி கடலை ரூ.3,560, 100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை ரூ.300 குறைந்து ரூ.8,000, பருவட்டு ரூ.300 குறைந்து ரூ.9,000. நாட்டு உளுந்து ரூ.400 குறைந்து ரூ.9,100, 100 கிலோ உளுந்தம் பருப்பில் பர்மா பொடிவகை ரூ.300 குறைந்து ரூ.10,000, நாட்டு வகை பருப்பு ரூ.200 குறைந்து ரூ.11,800, 100 கிலோ புதியரக முதல்வகை துவரம் பருப்பு ரூ.200 குறைந்து ரூ.8,700 (கிலோ ரூ.87), இரண்டாம் வகை ரூ.200 குறைந்து ரூ.8,300 (கிலோ ரூ.83), 100 கிலோ முதல்வகை பாசிப்பருப்பு ரூ.200 குறைந்து ரூ.9,100, இரண்டாம் வகை ரூ.200 குறைந்து ரூ.9,000. ஒரு குவிண்டால் ஆந்திரா வத்தல் ஏசி ரூ.300 குறைந்து ரூ.16,000 முதல் ரூ.16,200 க்கு விற்பனையானது.