பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலையில் சாகுபடிக்கு தேவையான வெங்காய விதையில்லை!

Added : டிச 01, 2019
Advertisement

உடுமலை:சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உடுமலை பகுதிகளில் சாகுபடிக்குத்தேவையான விதை வெங்காயம் இருப்பு இல்லை. எனவே, தரமான வெங்காயம் விதைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆண்டு தோறும், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும், தைப்பட்டத்தில், இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் சாகுபடி, நேரடியாக வெங்காயம் விதைப்பு மற்றும் விதை நாற்றங்கால் என இரு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.நேரடியாக வெங்காயம் நடவு செய்தால், 70 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய முடியும். விதை மூலம் சாகுபடி செய்யும் போது, 120 முதல் 130 நாட்களாகும்.பருவ மழை தீவிரம், வட மாநிலங்களில் வெள்ளத்தால் வெங்காயம் வரத்து சரிந்து, விலை அபரிமிதமாக உயர்ந்து, ரூ. 150 வரை விற்று வருகிறது. டிச - ஜன.,ல், சாகுபடியை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தற்போதைய விலையால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நேரடியாக சின்ன வெங்காயம் நடவு செய்ய, ஏக்கருக்கு, 700 கிலோ வரை விதை தேவை; இதனால், நேரடியாக வெங்காயம் நடவு செய்ய முடியாது.அதனால், சின்ன வெங்காயம் விதை மூலமே, நடப்பு பருவம் சாகுபடி செய்ய முடியும். விதை, கிலோ, 2,500 ரூபாய் முதல், 4 ஆயிரம் ரூபாய் வரை விற்று வருகிறது. எனவே, விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள் , தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்.வெங்காயத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தியை பெருக்கும் வகையில், தோட்டக்கலைத்துறை மூலம், அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் விதைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டமிட்டால் தீரும் சிக்கல்தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலாளர் பாலதண்டபாணி கூறியதாவது :சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்ததோடு, மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக சின்ன வெங்காயம் விதைப்புக்கு, விதை வெங்காயம் இருப்பு இல்லை; வாங்கும் விலையும் இல்லை.இதனால், வரும் தைப்பட்ட சாகுபடி, வெங்காய விதை மூலமே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏக்கருக்கு, சராசரியாக ஒரு கிலோ வெங்காய விதை தேவை உள்ளது.சான்று பெற்ற விதை, தற்போது கிலோ, 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. மக்காச்சோளம் அறுவடைக்கு பின், விவசாயிகள் வெங்காயம் சாகுபடியை துவக்கும் போது, கடும் தட்டுப்பாடும், விலை உயர்வு என கடும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது, சொற்ப அளவிலான விவசாயிகளுக்கு மட்டுமே, விதை வழங்கப்படுகிறது.எனவே, முன்னதாகவே திட்டமிட்டு, தோட்டக்கலைத்துறை மூலம், அனைத்து விவசாயிகளுக்கும், தரமான விதைகள், தட்டுப்பாடு இல்லாமல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பாலதண்டபாணி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X