பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் ஆர்.டி.ஓ., மாற்றத்தின் பின்னணி

Added : டிச 01, 2019
Advertisement

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆதிக்க சக்திகளுக்கு வளைந்து கொடுக்காததே கொடைக்கானல் ஆர்.டி.ஓ., சுரேந்திரன் இடமாற்றத்திற்கு காரணமாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆர்.டி..ஓ வாக சுரேந்திரன் 9 மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்டார். துடிப்பான இளைஞரான இவர், தனது நடவடிக்கைகளால் பொதுமக்கள் மத்தியில் பாராட்டு பெற்றார்.மாவட்டத்தில் திண்டுக்கல்லில் மட்டுமே நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம், மலைப்பகுதியிலும் முதன் முறையாக நடக்க முக்கிய பங்கு வகித்தார். மலைப்பகுதியில் போலி பட்டாக்கள் மூலம் அரசு நிலம் தாரை வார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கபளீகரம் செய்யப்பட்டது. இதற்கு துணை போன வி.ஏ..ஓ.,க்கள் 9 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்தார். முன்னுாறுக்கும் மேற்பட்ட போலி பட்டாக்களை ரத்து செய்தார்.இதில் வளம்கொழித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தார். இவரை ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஆதிக்க சக்திகள் தங்கள் பிடிக்குள் கொண்டுவர முயற்சித்தும் நடக்கவில்லை.நீர்நிலை ஆக்கிரமிரப்புகளை அகற்ற ஆய்வு,வெள்ளி நீர்வீழ்ச்சி - பஸ்ஸ்டாண்ட் வரை ஆக்கிரமிப்பு அகற்றம், கனிம வளம், பாறை தகர்ப்பு, இயந்திர பயன்பாடு மீது நடவடிக்கை எடுத்து இயந்திரங்களை பறிமுதல் என பலரது பாராட்டுக்களை பெற்றார்.போலி பட்டா ரத்தானதில் தொடர்புள்ளவர்கள் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, ஆர்.டி.ஓ., வை மாறுதல் செய்ய மனுஅளித்தனர். இதையடுத்து ஆளும்தரப்பினரின் செல்வாக்கால் குடியாத்தம் நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது கொடைக்கானல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X