அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் திறப்பு விழா

Added : டிச 01, 2019

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளி வடக்கு பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் திறப்பு விழா நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணீஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வடிவேல் வரவேற்றார். சக்கரபாணி எம்.எல்.ஏ., சுவரை திறந்து வைத்தார். தி.மு.க., நகர செயலாளர் வெள்ளைச்சாமி, முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X