பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திரம் மூலம் 'பேல்' ஆக மாற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இயந்திரம் மூலம் 'பேல்' ஆக மாற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

உடுமலை:உடுமலை நகராட்சியில், சேகரிக்கப்பட்ட, 61 டன் பிளாஸ்டிக் கழிவுகள், சிமென்ட் தொழிற்சாலைக்கு எரிப்பானாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சியில், நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக, பிளாஸ்டிக் பாட்டில், கவர்கள் என, நாள் ஒன்றுக்கு ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகி வருகிறது.சுகாதாரப்பணியாளர்கள் மூலம், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து வாங்கப்படுகிறது. மக்கும் குப்பைகள், இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு, உரமாக மாற்றப்படுகிறது.மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள், 'பைரோலிசிஸ் பிளான்ட்', மூலம், 12 அடி உயரம், ஆறு அடி அகலம் உள்ள, செங்கல் கட்டுமானத்திற்குள் உள்ள, உலைக்குள், இட்டு எரிக்கப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.வெளியேறும் ஆவி, உருளை மூலம் கொண்டு செல்லப்படுகிறது. உடனடியாக சுற்றிலும் உள்ள, குளிர்ந்த நீர், ஆவியை குளிர்வித்து, 'பைரோ ஆயில்' உற்பத்தி செய்யப்படுகிறது.இதில், எரிக்க முடியாத, அதிக அடர்த்தி காரணமாக கையாள முடியாத பிளாஸ்டிக் கழிவுகள், அதிக திறனுள்ள இயந்திரம் மூலம் அழுத்தி, 'பேல்' ஆக மாற்றப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 600 முதல் 700 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பேல் ஆக மாற்றப்பட்டு, அரியலுாரிலுள்ள சிமென்ட் ஆலைக்கு, பாய்லர் எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில், 61 டன் பிளாஸ்டிக் கழிவு பேல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, பேல் ஆக மாற்றி, 12 டன் அனுப்புவதற்கு தயாராக உள்ளது.நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,' பிளாஸ்டிக் கழிவுகளை அப்படியே, லாரிகளில் ஏற்றும் போது, குறைந்தளவு மட்டுமே ஏற்ற முடிகிறது. தற்போது, பேல் ஆக மாற்றி ஏற்றும் அதிகளவு லோடு ஏற்ற முடியும். அதனால், தினமும் சேகரமாகும் கழிவுகள் அனைத்தும், உடனுக்குடன் பேல் ஆக மாற்றப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
02-டிச-201910:16:40 IST Report Abuse
RADE பிளாஸ்டிக் எரிப்பதனால் விளையும் கேடு அறிந்து தான் இதை செய்கிறார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X