பொது செய்தி

இந்தியா

நிலக்கல் -- சன்னிதானம் இடையே ரோப்வே தேவசம்போர்டு திட்டம்

Added : டிச 01, 2019
Advertisement

சபரிமலை:நிலக்கல் -_ சன்னி தானம் இடையே 'ரோப்வே' அமைப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது.

சபரிமலை சன்னிதானத்துக்கு தேவையான பொருட்கள் பண்டைய காலத்தில் கழுதை மீதும், தலை சுமையாகவும் கொண்டு வரப்பட்டது. இதற்கு அதிகநேரம் ஆனதுடன், அவசரத்துக்கு பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. பம்பையில் இருந்து மரக்கூட்டத்துக்கு சுப்பிரமணியன் பாதை அமைக்கப்பட்டதும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிராக்டரில் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து கழுதை மீது கொண்டு செல்வதும், தலை சுமையாக கொண்டு செல்வதும் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரோப்வே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்ட தேதியும் முடிவு செய்யப்பட்டு பின்னர் மாற்றி வைக்கப்பட்டது.இந்நிலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு ரோப்வே அமைப்பதற்கு பதிலாக, நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்துக்கு புதிய ஆய்வு நடத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. புதிய பாதையில் சில கி.மீ., மட்டுமே அதிகரிக்கும். சபரிமலை அருகே நிலக்கல்லை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலக்கல்லில் இருந்து ரோப்வே அமைத்தால் பம்பைக்கு சரக்கு வாகனங்கள் வருவதை தவிர்க்க முடியும். கேரள ஐகோர்ட் மற்றும் சபரிமலை உயர்மட்டகுழுவின் அனுமதி பெற்று இந்த திட்டத்தை செயல்படுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X