பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் இடைநிற்றலை தடுக்க பள்ளியில் 'இம்பார்ட்' திட்டம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
உடுமலை:அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், 'இம்பார்ட்' எனும் சிறப்பு செயல்திட்டம், திருப்பூர் மாவட்டத்தில், 50 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.இடைநிற்றலை கட்டுப்படுத்தவும், கற்றல் செயல்பாடுகளில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும் 'இம்ப்ரூவிங் பார்டிசிபேஷன்' எனும் 'இம்பார்ட்' செயல்வழி கற்றல் திட்டத்தை

உடுமலை:அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், 'இம்பார்ட்' எனும் சிறப்பு செயல்திட்டம், திருப்பூர் மாவட்டத்தில், 50 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.இடைநிற்றலை கட்டுப்படுத்தவும், கற்றல் செயல்பாடுகளில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும் 'இம்ப்ரூவிங் பார்டிசிபேஷன்' எனும் 'இம்பார்ட்' செயல்வழி கற்றல் திட்டத்தை கல்வித்துறை துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 50 பள்ளிகள் தேர்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும், 9ம் வகுப்பு மாணவர்கள் கொண்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாட வாரியாக ஐந்து குழுக்கள் உருவாக்கப்படுகிறது.ஒரு குழுவில் நன்கு படிக்கும் ஒரு மாணவன், நடுத்தரமாக படிக்கும் ஒரு மாணவன் மற்றும் பாடத்தில் பின்தங்கியுள்ள மூன்று மாணவர்கள் இருப்பர். இக்குழுவுக்கு வகுப்பறைக்கு வெளியே சென்று கற்றுக்கொள்ளும்படி பயனுள்ள தலைப்பு ஒன்று வழங்கப்படும். குழுவுக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பார்.சம்பந்தப்பட்ட இடங்களுக்கு இம்மாணவர் குழு நேரில் சென்று அங்குள்ள நடவடிக்கைகளை அறிந்து அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும். கல்வி மாவட்ட அளவில், 5 சிறந்த அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு, அக்குழு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் பாடம் மற்றும் பாடம் சாராத பொது அறிவு விஷயங்களில் தங்கள் பங்களிப்பை அதிகரிக்கவும், ஆர்வத்தை துாண்டுவதும் இதன் முக்கிய நோக்கம். வகுப்பறையை தாண்டிய இவ்வகை பயிற்சிகள் கற்றலில் பின்தங்கிய குழந்தைகளின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும். குழுவாக செயல்படுதல், கேள்வி கேட்டல், கவனித்தல், உள்வாங்குதல் திறன்கள் மேம்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X