பொது செய்தி

தமிழ்நாடு

மின்விசிறி காற்றில் உலர்த்தப்படும் கார்த்திகை அகல் விளக்குகள்

Added : டிச 01, 2019
Advertisement

வடமதுரை: வடமதுரையில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்வதால் கார்த்திகை பண்டிகைக்கான அகல் விளக்குகள் மின்விசிறி காற்றில் உலர வைக்கப்படுகின்றன.

வரும் டிச.10ல் கார்த்திகை தீப விழா நடக்க இருப்பதால் அகல் விளக்குகளின் தேவை அதிகம் இருக்கும். இதனால் வடமதுரை மேற்கு ரத வீதியில் பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை அதிகளவில் தயார் செய்து வருகின்றனர்.வடமதுரையில் சில நாட்களாக அவ்வப்போது துாரல் மழை பெய்கிறது. பகல் நேரத்தில் வெயில் இல்லாததால் அகல் விளக்குகளை உலர வைக்க வழியில்லை. இதனால் சிலர் மின்விசிறிகளின் கீழ் வைத்து உலர வைக்கின்றனர். மண்பாண்ட தொழிலாளி கந்தவேல் கூறுகையில், ''இந்தாண்டும் மொத்த கொள்முதல் விலையில் ஆயிரம் அகல்விளக்குகள் ரூ.600 முதல் 700 அளவிலே உள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கொள்முதல் விலை உயரவில்லை. இதனால் வரும்காலத்தில் இத்தொழிலில் புதியவர்கள் நுழைய தயங்குவர்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X