பொது செய்தி

தமிழ்நாடு

அரியராவி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 01, 2019
Advertisement

பெண்ணாடம் : அரியராவி ஏரியில் முழு அளவு தண்ணீர் நிரம்பியுள்ளதால் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல், இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏரிகள், குளங்கள், திறந்தவெளி கிணறுகள் நீர் நிறைந்து காணப்படுகிறது. இதே போன்று, பெண்ணாடம் மற்றும் அரியராவி, மாளிகைகோட்டம், துறையூர், பெ.பூவனூர், ஓ.கீரனூர், சவுந்திரசோழபுரம், செம்பேரி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அரியராவியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 49 ஏக்கர் பரப்பிலுள்ள பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து முழுஅளவை எட்டியதால், உபரிநீர் தடுப்பணை வழியாக துறையூர் ஏரிக்கு செல்கிறது. இதன் மூலம் அரியராவி, துறையூர், மாளிகைக்கோட்டம் கிராம பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X