பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை தோட்டக்கலை மாணவர்கள் விளக்கம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
மடத்துக்குளம்:அங்கக விவசாயத்தின் பாரம்பரியங்களில் ஒன்றான பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை குறித்து பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள், கிராமத்தங்கல் திட்டத்தில், மடத்துக்குளம், நீலம்பூரில் தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.பஞ்சகவ்யம் தயாரித்து, பயன்படுத்துவது குறித்து,

மடத்துக்குளம்:அங்கக விவசாயத்தின் பாரம்பரியங்களில் ஒன்றான பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை குறித்து பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள், கிராமத்தங்கல் திட்டத்தில், மடத்துக்குளம், நீலம்பூரில் தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.பஞ்சகவ்யம் தயாரித்து, பயன்படுத்துவது குறித்து, வேளாண்துறையினர் மற்றும் மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கி கூறியதாவது: ஒரு லிட்டர் பஞ்சகவ்யம் தயாரிக்க, நாட்டு மாட்டின் சாணம், 300 கிராம், 100 மி.லி., பசு நெய் சேர்த்து பாத்திரத்தில் கலக்கி, வெள்ளை துணியால் மூடி, மூன்று நாள் வைக்க வேண்டும்.அதன் பின், அதில் மாட்டின் கோமியம், 300 மி.லி., சேர்த்து, கலந்து மீண்டும், துணியால் மூடி வைத்து, ஐந்தாவது நாளில் பால், தயிர் 100 மி.லி., நாட்டுச்சர்க்கரை 50 கிராம், நாட்டு வாழைப்பழம் ஒன்று மற்றும் இளநீர், 50 மி.லி., சேர்த்து கலக்க வேண்டும், இதனை, 30 நாள் வைத்திருந்தால் 'பஞ்கவ்யம்' ஆகிவிடும்.பஞ்சகவ்ய கரைசலில், 300 மி.லி.,எடுத்து, 10 லிட்டர் நீருடன் கலந்து சாகுபடி செய்த பயிர்களில் தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, இதை தெளிப்பதால், மண்ணில் நுண்ணுயிர்கள் வளர்ந்து, மண்வளம் பெருகும்.இந்த நிலத்தில் விளையும் பயிர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தென்னை மரங்களுக்கு, 10 லிட்டர் நீருடன், 200 மி.லி., பஞ்ச கவ்யம் கலந்து, மாதம் ஒரு முறை தெளிப்பதால் நல்ல பலன் கிடக்கும்.பஞ்சகவ்யம் பயன்படுத்திய நிலத்தில் விளையும் காய்கனிகள் பலநாட்கள் நல்ல நிலையில் இருக்கும், இது மிகச்சிறந்த பூச்சி விரட்டி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X