சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Added : டிச 01, 2019
Advertisement

நெல்லிக்குப்பம் : வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் அடுத்த கோண்டூரை சேர்ந்தவர் அன்புராஜா,32. இவர் கடந்த மாதம் 14ம் தேதி, நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார். நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்கு பதிந்து, வழிப்பறி செய்த பில்லாலி தொட்டியை சேர்ந்த மணி மகன் சூர்யா என்கிற சுனாமி சூர்யா,23; கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

சூர்யா மீது நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் புதுநகர் காவல் நிலையங்களில் 5 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி. அபிநவ் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை போலீசார் சிறையில் இருக்கும் சூர்யாவிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X