சபரிமலை:பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது ஆன்லைனில் (விரிச்சுவல் கியூ) முன்பதிவு செய்த பக்தர்களும் காத்திருக்க வேண்டியுள்ளதால், முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும் , என சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி ராகுல்.ஆர். நாயர் கூறினார்.
ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் மரக்கூட்டத்தில் இருந்து பிரிந்து சந்திராங்கதன் ரோடு வழியாக பெரிய நடைப்பந்தல் சென்று 18-ம் படி ஏறலாம். பெரிய நடைப்பந்தலில் இரண்டு கியூ உள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள் தனியாக கியூவில் நிற்கின்றனர். இரு பிரிவினரையும் கூட்டத்தை பொறுத்து படியேற போலீசார் அனுப்புகின்றனர்.என்றாலும் கூட்டம் அதிமாகும் போது ஆன்லைன் பதிவு பக்தர்களை சந்திராங்கதன் ரோடு முடிவடையும் இடத்தில் போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்துகின்றனர்.
பெரிய நடைப்பந்தலில் கூட்டம் குறைவதை பொறுத்து இங்கிருந்து கட்டம் கட்டமாக அனுப்புகின்றனர். இதனால் எதிர்காலத்தில் ஆன்லைன் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும்.டோலி கட்டணம் சூழ்நிலைக்கேற்ப வசூலிப்பதை தடுக்க பம்பை- சன்னிதானம் இடையே ஒரு வழிக்கு 2,000 , இரு வழிக்கு 3,600 ரூபாய் கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என ராகுல். ஆர். நாயர் கூறினார்.