சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை முற்றுகை

Added : டிச 01, 2019
Advertisement

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே காயமடைந்தவரை வேறு மருத்துவமனைக்கு செல்ல கூறியதால், ஆத்திரமடைந்தவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

சிறுபாக்கம் அடுத்த மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி, 48; விவசாய தொழிலாளி. இவர், நேற்று மாலை, வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அரிவாள் விழுந்ததால் காலில் பலத்த காயம் அடைந்தார்.அவரது உறவினர்கள் மங்களூர் வட்டார அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பணியிலிருந்த டாக்டர்கள், செவிலியர்கள், பாலுசாமிக்கு முதலுதவி அளித்து, வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர்.

மருத்துவமனையில் தையல் போட்டு, மருந்துகள் வழங்கும் வசதிகள் இருந்தும் சிகிச்சை அளிக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சமரச பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X