செம்பட்டி: சித்தையன்கோட்டை தர்கா கொடிக்கம்பத்தில், அரசியல் கட்சியின் வண்ணத்தை மர்ம நபர்கள் பூசியிருந்தனர். இப்பிரச்னையால், இப்பகுதியில் பரபரப்பு உருவானது. பதட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஜமாத் தலைவர் உதுமான்அலி, புகாரின் பேரில் சித்தையன்கோட்டை அர்ஜுனனை 40, செம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரிடம், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Advertisement