சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகு சவாரி நிறுத்தம் 

Added : டிச 01, 2019
Advertisement

கிள்ளை : பிச்சாவரத்தில், பலத்த மழை பெய்து வருவதால், படகு சவாரி நேற்று நிறுத்தப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக்காடுகளுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை தாவரங்கள் நிறைந்துள்ளது. சுற்றுலா மையத்திற்கு தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், மோட்டர் படகுகள் மற்றும்துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

பிச்சாவரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன், தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனக்காடுகளில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி நேற்று மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா மையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X