சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ மூட்டி குளிர் காய்ந்த இரவு காவலாளி பலி

Added : டிச 01, 2019
Advertisement

குன்னுார்:குன்னுாரில் கடுங்குளிரால், தீ மூட்டி குளிர் காய்ந்த இரவு காவலாளி, மூச்சு திணறி பலியானார்.நீலகிரி மாவட்டம், குன்னுார், ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிகுமார், 30, சிம்ஸ் பார்க் அருகே, தனியார் காட்டேஜில், இரவு காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கடும் குளிர் காரணமாக, அறைக்குள், நெருப்பு மூட்டி, குளிர் காய்ந்தபடி உறங்கியுள்ளார்.நேற்று காலை, மயங்கிய நிலையில் இருந்த அவரை, தோட்ட பணியாளர்கள் மீட்டு, குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X